close
Choose your channels

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

Friday, February 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது. 'தங்கல் படத்தில் நடித்த ஜாய்ரா வாசிம் முக்கிய வேடத்திலும் அமீர்கான் சிறப்பு தோற்றத்திலும் நடித்த இந்த படம் ஜனவரி 19ஆம் தேதி சீனாவில் வெளியானது.

வெளியான 10வது நாளில் ரூ.400 கோடியும், இரண்டாவது வார முடிவில் ரூ.500 கோடியும் இந்த படம் சீனாவில் வசூல் செய்துள்ளது.

ஏற்கனவே அமீர்கான், ஜாய்ரா வாசிம் நடித்த 'தங்கல்' திரைப்படமும் சீனாவில் மிகப்பெரிய வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 'தங்கல்' திரைப்படத்தின் முதல் வாரயிறுதி வசூலை முறியடித்து 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் சீனாவில் முதல்வாரயிறுதியில் ரூ.72.68 கோடி வசூல் செய்துள்ளதாக சீன பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment