ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும் விஜய் சேதுபதி முன்னிலையில் விமர்சனம் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, அந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்களின் நாமினேஷன் குறித்த தகவல் வெளியாகும். இன்றைய நாமினேஷன் படலத்தில் இரண்டாவது வார நாமினேஷன் பிராசஸில் தர்ஷா, சாஞ்சனா, சௌந்தர்யா ஆகியோர் ஜெப்ரியை நாமினேஷன் செய்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ஜே ஆனந்தி, சுனிதா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித்தை நாமினேஷன் செய்கின்றனர். "அவர் எதையும் ஓபன் ஆக பேச மாட்டேன்" என்கிறார் என்று காரணம் கூறுகின்றனர்.
இதையடுத்து தீபக், அர்னவ், மற்றும் ரஞ்சித் ஆகியோர் சௌந்தர்யாவை நாமினேஷன் செய்கின்றனர். "தேவையான அளவு பொறுப்பு எடுப்பதில்லை" என்ற குற்றச்சாட்டு வருகிறது. மேலும், சத்யா மற்றும் ஆர்ஜே விஷால், ஆகிய இருவரும் சாச்சனாவை நாமினேஷன் செய்து "வயதையும் தாண்டி அவர் சில விஷயங்கள் செய்கிறார்" என காரணங்களை கூறுகின்றனர்.
மொத்தத்தில், இந்த வாரம் ஜெஃப்ரி, ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் சாச்சனா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day8 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 14, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/UoMs57p1V9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments