ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் 2வது திருமண நாள் கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி காலத்திலும் இன்னும் சாதி மோதல்கள், ஆணவக்கொலை, கெளரவக்கொலை ஆகியவை ஆங்காங்கே நடந்து வருவது மனித குலத்திற்கே ஒரு இழுக்காக கருதப்படுகிறது. குறிப்பாக காதலால் ஒன்றிணைந்த தம்பதியர்களை சாதி என்னும் வெறி காரணமாக கெளரவக்கொலை என்ற பெயரில் வெட்டி வீழ்த்தும் கயவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். இந்த கெளரவ கொலையால் வாழ்க்கையை தொலைத்த பலரில் ஒருவர் கவுசல்யா.
திருப்பூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவர். ஆனால் திருமணம் ஆன ஒருசில நாட்களீல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சாதி தீவிரவாதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கவுசல்யா படுகாயத்துடன் உயிர் பிழைக்க, சங்கர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இன்று சங்கர்-கவுசல்யாவின் இரண்டாம் ஆண்டு மண நாளை அடுத்து கவுசல்யா தனது ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சி தரும் கவிதை ஒன்றின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் அந்த கண்ணீர் கவிதை. இதை படித்த பின்னராவது சாதி என்னும் கொடிய நோய் பிடித்தவர்கள் குணமாகட்டும்.
இந்நாள்!
அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று-எம்மைக் கண்டதும் கூறினாய்!
அதற்கு நான்,
பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன்.
நீ கண்ணியமாக-என்னைவிட்டு கலைந்து சென்றாய்!
"சிறு இடைவெளியோடு"
மறுமுறை உனதுபேச்சு- "மன்னிப்பிலிருந்தது"
நீ தவறு செய்துவிட்டாய்-என்பதற்காக "அல்ல"
நான் உனது - "தாய்மை" எண்ணத்தை -"தவறாக" -நினைத்திடாது இருப்பதற்கா!
நீகடந்த
அந்நிமிடமே தாமதம்-இன்றும் காரணமில்லை-"என்னிடம்"
உனது நினைவிற்கு மாறாகத்தான்-நினைத்தேன்.
உண்டான இடைவெளியை-நமக்குள்-ஏனின்னும் உடைக்கவில்லையென்று!
கல்லூரி நண்பன்-என்றெனது-காதல் கணவனாவான் -எனநினைத்தேன்!
நாம் நினைத்தது-நிறைவேறியது-நாம்
நினைத்தவைகள்-நிறைவேறவில்லை!
நமது காதல்-நாமறிந்து-
பாராட்டிக்கொண்டபோது
நமது காதலை - எமது வீடறிந்து விட்டது.
"சாதி-சனத்தை" மனதில் நிறுத்தி
வழக்கம்போல்-எம்மைப் பெற்றவர்கள்-தன்வேலை பார்கையில்!
நமக்கான- கால இடைவெளி ஏதுமின்றி-இரு கரம்கோர்த்தோம்.
சாதியையும் உடைத்தோம்!
உடைந்த சாதியை-இணைக்க "எண்ணி"
எண்ணற்ற கனவுகளோடு-
எதிர்காலம் நோக்கி
ஊடலும்,கூடலுமின்றி-இணைந்திருந்த நம்மை,
பிரித்து வைத்துவிட்டார்கள்-மரணப்பரிசு கொடுத்து.
உன்னை-எம்மிடமிருந்து-என்னை உம்மிடமிருந்து.
ஆனால்?
நமது மனமும்-மனதின் நினைவும்-எவராலும்- பிரித்திட இயலாதவையடா
எனது மனவாளா!
ஈருயிராக இருந்தது இன்று-ஓருயிராகிவிட்டது.
சாதியைச் - சவக்குழியேற்றுவேனென்று
உன்மேல் உறுதியெடுத்துக்-கூறுகிறேன்.
இன்று நமது இரண்டாமாண்டு-
"மணநாளடா"
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments