கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும், தமிழக அரசின் பொறுப்புள்ள நடவடிக்கையாலும் கொரோனா வைரஸ் பெரும் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே குணமான நிலையில் தற்போது இரண்டாவது நபரும் குணமாகி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து இரண்டு ரத்தப் பரிசோதனை செய்ததில் இரண்டிலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் படுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டாவது நபராக இந்த நபர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனாவுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி இருப்பது ஒரு குட் நியூஸாக கருதப்படுகிறது
#Update: TN’s second positive case for corona who traveled from Delhi & undergoing treatment in #RGGH is recovering well. He is declared corona negative after two subsequent mandatory tests. He will be discharged in 2 days.@MoHFW_INDIA @CMOTamilNadu #vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com