'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனுக்கு 2வது திருமணம்.. என்னடா நடக்குது இங்கே...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ’எதிர்நீச்சல்’ சீரியல் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள ஆதி குணசேகரன் கேரக்டர் இரண்டாவது திருமணம் செய்து வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் சீரியல் மலையாளத்தில் "காணல் பூவு" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் நடிகர், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருவது போன்ற காட்சிகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்து, தலை குனிந்து வீட்டு வாசலில் வெட்கத்துடன் ஈஸ்வரி முன் நிற்கும் ஆதி குணசேகரனை பார்த்து, தமிழ் ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
தமிழில், ஆதி குணசேகரன் கேரக்டர் கம்பீரமாகவும் திமிர் பிடித்த கேரக்டராகவும் அமைந்திருக்கும் நிலையில், மலையாளத்தில் இந்த கேரக்டரை "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க" என்று விமர்சிக்கின்றனர்.
தமிழில் பெண்ணடிமைத்தனமான சில காட்சிகள் மலையாளத்தில் மாற்றப்பட்ட நிலையில், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஆதி குணசேகரன் இன்னொரு திருமணம் செய்து வருவது கேலிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments