'பீஸ்ட்' பட நடிகருக்கு 2ஆம் திருமணம்.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். பிரபல மலையாள நடிகரான இவர் தமிழில் ’பீஸ்ட்’ படம் மூலம் அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் சமீபத்தில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் 40 வயதாகும் ஷைன் டாம் சாக்கோ தனுஜா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ஷைன் டாம் சாக்கோ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு..!

தொடர்ந்து வன்முறை திரைப்படங்கள் இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது இந்த போட்டியாளரா? எத்தனை லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டதாக தகவல் கசிந்து உள்ளது.

ராம்ராஜ் நிறுவனத்தின் வேட்டி வாரம்.. புதிய கோம்போ பேக் அறிமுகம்..!

 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்  ராம்ராஜ்   நிறுவனம் ஜனவரி  1 முதல் 7 வரை வேட்டி வாரம்  கொண்டாடி வருகிறது.  

டாஸ்க்கில் தப்பாக விளையாடிய மணி.. தளபதி விஜய் என கூறி வாங்கிய பல்பு..!

பிக் பாஸ் டாஸ்க்கில் கேட்ட ஒரு கேள்விக்கு தளபதி விஜய் என தப்பாக பதில் கூறி போட்டியாளர் மணி வாங்கிய பல்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

துபாயில் சொகுசு படகில் அஜித் குடும்பம்.. தல என ரசிகர்கள் கோஷம்.. வைரல் வீடியோ..!

துபாயில் சொகுசு படகில் அஜித் தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த படகில் இருந்து ரசிகர்கள் 'தல' என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.