'நம்ம வீட்டு பிள்ளை'யின் அடுத்த அப்டேட் இதோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 16வது திரைப்படத்தின் டைட்டில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' என இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தது.
இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு லுக்குகளை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சிவகார்த்திகேயன், அனுஇமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், அர்ச்சனா, பாரதிராஜா, சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
Second Look of #NammaVeettuPillai Today at 6pm! #NVPSecondLookat6pm @Siva_Kartikeyan @Pandiraj_dir @immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @ItsAnuEmmanuel @natty_nataraj @studio9_suresh @nirav_dop @AntonyLRuben@Veerasamar
— Sun Pictures (@sunpictures) August 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments