சிக்கலில் மாட்டிய ரிலையன்ஸ்… முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் தனது பெட்ரோலிய நிறுவனத்தின் பங்கு விற்பனையின்போது மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ரூபாய் அபராதமும் அதன் தலைவராக இருந்து வரும் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் நடைபெறும் மோசடிகளைக் கண்காணிக்க செபி எனப்படும் ஒழுங்குமுறை வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியம் மேற்கொண்ட விசாரணையில் ரிலையன்ஸ் நிறுவனம் வர்த்தக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனால் செபி வாரியம் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு அபராதத்தை விதித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் கடந்த 2009 இல் ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. கொரோனா நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தபோதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது செபி மேற்கொள்ளும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளினால் ரிலையன்ஸ் நிறுவனதிற்கு சிக்கல்கள் முளைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் தவிர இதேபோன்று வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கு செபி ஒழுங்குமுறை வாரியம் ரூ.20 கோடி மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout