மூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதப் பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த திட்டத்தால் தமிழகத்தில் உள்ள 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வீதம் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும், இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், சிலிண்டர் கொண்டு வரும் நபரிடம் சிலிண்டருக்கான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் அவர்களது வங்கி கணக்கில் அவர்கள் செலுத்திய தொகை முழுவதுமாக டெபாசிட் செய்யப்படும் என்றும் இந்தியன் ஆயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதற்குமுன் மானிய தொகை மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு சிலிண்டருக்கான முழு தொகையும் டெபாசிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com