நாளை சூர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட்டா? பிரபலத்தின் டுவிட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
’நாளை ஒரு சிறப்பான நாள்’ என சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசை அமைத்த பிரபலம் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதால் நாளை சூர்யா படத்தின் அப்டேட் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’ஜெய்பீம்’ என்பதும் இந்த படத்தை ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ஒரு சிறப்பான நாள் என இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து நாளை ’ஜெய்பீம்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tomoro is gonna be a special day.
— Sean Roldan (@RSeanRoldan) October 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com