சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் குறித்த சூப்பர் அப்டேட்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ படத்தின் பின்னணி இசை குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். பல இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பின்னணி இசை அமைக்கும் பணியின் போது எடுத்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தின் அடுத்த அப்டேட் மிக விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருங்கள் நண்பர்களே என்றும் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான பின்னணி இசை குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார்.
SURPRISE! #Jaibhim background score snippet is here. Something to keep you smiling till the next update! Have a great weekend friends ❤️ @PrimeVideoIN @Suriya_offl @rajsekarpandian @tjgnan @SonyMusicSouth pic.twitter.com/Yn1drZAzIr
— Sean Roldan (@RSeanRoldan) October 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments