தனுஷ்-செல்வராகவன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2019]

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிவுள்ளார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான ’அசுரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. இரண்டாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ்-தாணு இணையும் மூன்றாவது படத்தை செல்வராகவன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், கிட்டத்தட்ட இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ’மயக்கமென்ன’ படத்திற்கு பிறகு தனுஷ்-செல்வராகவன் மீண்டும் இந்த படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அதேபோல் செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்த ’என்ஜிகே’ திரைப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், தனுஷ்-செல்வராகவன் இணையும் இந்த படத்திலும் யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கலாம் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த பா.பாண்டி மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள சீன் ரோல்டான் தற்போது மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது