கொரோனா தடுப்பு பணிக்காக சீமான் ரூ.5 லட்சம் நிதியுதவி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் ரூ.5 லட்சம் நிதியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு நன்கொடைகளை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவியை வழங்கி உள்ளார்.
இந்தச் சந்திப்பை அடுத்து அவர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில் கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி நல்லது செய்வதை பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)