சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

சத்யராஜ் நடிப்பில் சர்ஜூன், இயக்கியுள்ள 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையுலகில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும், வரலட்சுமி மற்றும் கிஷோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். 12 மணி நேர எச்சரிக்கை விடுத்து கடத்தல் கதையாக ஆரம்பிக்கும் இந்த படத்தில் சவுண்ட் டிசைன் ஒரு முக்கியமானதாக கருதபப்டுகிறது

இந்த படத்தின் ரன்னிங் டைம் 120 நிமிடங்கள் மட்டுமே அதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இந்த படம் ஓடுகிறது. லட்சுமி மற்றும் மா ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் சர்ஜூன், த்ரில் மற்றும் எமோஷன் காட்சிகள் அடங்கிய ஒரு படத்தை கொடுக்கவிருக்கின்றார். இந்த படம் வெளியாகும் முன்பே நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கள்ளிச்செடி காயத்துக்கே கலங்குவேன்: சொந்த மாவட்ட சோகம் குறித்து பாரதிராஜா

தேனி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் தனது சொந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:

தளபதி 62: 'கத்தி', 'மெர்சல்' படங்களை ஓவர்டேக் செய்யும் விஜய்

விஜய் நடித்த சமீபத்திய படங்களில் சமுதாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருந்தது என்பது தெரிந்ததே. 'கத்தி' படத்தில் விவசாயிகளின் பிரச்சனை,

அதர்வாவின் பூமராங் படத்தில் இணைந்த மேயாத மான்' நடிகை

நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும்

கராத்தே தியாகராஜன் அறிக்கையும் குஷ்புவின் டுவீட்டும்

உட்கட்சி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ் கட்சி. இதை இந்த கட்சியினர்களே ஒப்புக்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோஷ்டி இருக்கின்றது என்பதை எண்ணுவது கூட கடினம்தான்