'நீயா 2' படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' பெற்றுள்ளது.
கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். இந்த படத்தில் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷபீர் இசை விருந்தாக 'தொலையுறேன்' பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று 'இன்னொரு ரவுண்டு' என்ற பாடலும் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
'நீயா' முதல் பாகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2'விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது. பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
எல். சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார். படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com