இன்னொரு பூமியா??? நாசா வெளியிட்ட தெறிக்கவிடும் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,October 29 2020]
உயிரினங்கள் (மனிதன், விலங்கு…) பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலாவது வாழுகிறதா என்பது குறித்த ஆர்வம் எல்லோருக்கும் இருக்கதான் செய்கிறது. ஆனால் பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமான கூறுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். அதற்கு காரணம் பூமியில் உயிர் வாழ்வதற்கு தேவையான வெப்பநிலை, நீர், காற்று போன்றவை சரிசம விகிதத்தில் காணப்படுகிறது. ஆனால் இதேபோன்ற அம்சம் அண்டத்தில் (பால்வெளி மண்டலத்தில்) உள்ள வேறு எந்த கிரகத்திலும் இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர்.
இந்நிலையில் பூமியைப் போன்ற தன்மை, வேறு கிரகத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அந்த வகையில் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்களை கடந்த சில தினங்களுக்கு முன் நாசா உறுதிப்படுத்தி இருந்தது. அதையடுத்து தற்போது இன்னொரு வியப்பான தகவலையும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டு இருக்கிறது.
அதில் பூமியைப் போலவே உயிரினம் வாழ்வதற்குத் தேவையான தன்மைக் கொண்ட ஒரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்து உள்ளதாகக் கூறியுள்ளது. பூமியை போலவே தன்மைக் கொண்ட கிரகங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் நாசா கடந்த 2018 ஆம் ஆண்டு TESS எனும் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. அந்த செயற்கைக்கோள் இதுவரை 11 exoplant (நமது 9 கிரகங்களைத் தவிர) கிரகங்களை கண்டுபிடித்து உள்ளது.
அதில் ஒன்றுதான் TOI-700d. இந்தக் கிரகத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஜனவரி மாதமே கண்டுபிடித்து விட்டது. ஆனால் இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வு அறிக்கையை நாசா விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டு உள்ளனர். அதில் பூமியைப் போலவே உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த கிரகத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல் விஞ்ஞானிகளிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் பூமியைப் போலவே இன்னொரு கிரகம் இருந்தால் எப்படி இருக்கும் என இதுவரை கற்பனை செய்து மட்டுமே பார்த்த விஞ்ஞானிகள் தற்போது அதேபோன்ற தன்மைக் கொண்ட ஒரு கிரகத்தை முதன் முதலாகக் கண்டுபிடித்து உள்ளனர். அந்த வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் 3900 கெல்வின் வெப்பநிலையோடு இருப்பதாகவும் இந்த அளவு உயிரினம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பூமியில் இருந்து 102 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்தப் புதிய கிரகத்தைக் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.