கொரோனா பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி சுட்டுக்கொலை!!! நீடிக்கும் மர்மம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பென்சிலேவேனியாவில் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வை மேற்கொண்டு வந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த வார இறுதியில் சுட்டக் கொல்லப்பட்டார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியளரான பிங் லியு (37) கடந்த சனிக்கிழந்தை அவரது வீட்டிற்குள் சுடப்பட்டு கிடந்தார் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளரான பிங் லியு வின் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு இருந்ததாகவும் அவர் இறந்த ஒரு மணிநேரத்திற்கு பின்பு 46 வயதான ஹாவோ கு என்பவர் சுடப்பட்டார் என்றும் அந்நகரத்தின் டிடெக்டிவ் ஒருவர் தெரிவித்து உள்ளார். இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரின் கார், பிங் லியு வின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இருவரும் ஒன்றாக இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்நகரக் காவல்துறை கூறியிருக்கிறது. ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பிங் லியு கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் இந்தக் கொலை நடந்திருக்குமோ என்கிற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிங் லியு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை முடித்திருக்கிறார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்றும் கொரோனா பரவல் நோய்த்தொற்று குறித்த ஆய்வுகளில் மிகச் சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com