100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,August 04 2020]
100% கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதனை அடுத்தே இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பிள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை முழுவதுமாக வசூலிக்கக் கூடாது என்றும், பகுதி பகுதியாக வசூலிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி 100% பள்ளி கட்டணங்களை ஒருசில தனியார் பள்ளிகள் கட்ட வேண்டும் என பெற்றோர்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் ’100% கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் தனியார் பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது