நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்து இருந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்றும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இந்த முடிவை தமிழக அரசு எடுத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் கொடுத்த கருத்துக்களின் அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது

மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆனால் அதே நேர்த்தில் அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் டிசம்பர் இரண்டாம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 

More News

இந்த வாரம் ஜெயிலில் இருந்து தப்பிப்பாரா பாலா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!

சற்குணம் இயக்கிய 'வாகை சூட வா' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்,

அசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின்  ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி

18 மணிநேரம் பேக்கப்பா ??? அசத்தும் புதிய லேப்டாப் அறிமுகம்!!!

கொரோனா காலத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களின் பயன்பாடு ரொம்பவே அதிகரித்து விட்டது.

கொரோனா காலத்தில் கோவிலை மட்டும் ஏன் திறக்குறீங்க… இந்த ஒரு கேள்விக்கு மரணத் தண்டனையா???

கொரோனா காலத்தில் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன் எனக் கேள்விகேட்ட தடகள வீரருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படலாம்