தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

கொரோனா வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்றும் திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் இயங்கலாம் என்றும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் திரையரங்குகள் மால்கள் ஆகியவையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More News

கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும்,

'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில்

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன