நாடா புயல் எதிரொலி. சென்னை உள்பட 5 கடலோர மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Wednesday,November 30 2016]

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நாடா' புயல் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் அதாவது டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் என இரண்டு தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது.

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் சென்னை மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல். 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை...

ரூ.500 செலவில் திருமணம் செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரூ.500 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்...

திரை அரங்குகளில் தேசிய கீதம். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தற்போது புகை பிடிப்பதன் தீங்கு குறித்த விழிப்புணர்வு விளம்பரம் திரையிடப்பட்டு...

தமிழகத்தை நோக்கி வரும் 'நாடா' புயல். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அது புயலாக உருவாகியுள்ளதால் டிசம்பர் 2 முதல்...

மந்திரவாதியின் பிடியில் பிரபல கவர்ச்சி நடிகை. சென்னை போலீசில் புகார்

'தை பொறந்தாச்சு', என்னம்மா கண்ணு', 'என் புருஷன் குழந்தை மாதிரி' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்தவர் நடிகை பாபிலோனா...