11ஆம் வகுப்பு மாணவியை கலெக்டர் இருக்கையில் உட்கார வைத்த கலெக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருவண்ணாமலை அருகே செய்யாறு பகுதியில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்தார்
அப்போது கடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்ற மோனிஷா என்ற மாணவிக்கு அவர் ஊக்கத்தொகை மற்றும் பரிசு ஆகியவற்றை வழங்கி கலெக்டர் பாராட்டினார். அப்போது கலெக்டரிடம், அந்த மாணவி நானும் உங்களைபோல் மாவட்ட கலெக்டராவதே எனது லட்சியம், எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் மோனிஷாவை அழைத்த கலெக்டர் கந்தசாமி, அரசு தனக்கு வழங்கிய சைரன் பொருத்திய காரில் தன்னுடைய இருக்கையில் மோனிஷாவை உட்கார வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை மாணவியிடம் வழங்கிய கலெக்டர் கந்தசாமி, 'இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க வேண்டும். நானும் உன்னைப்போல் அரசு பள்ளியில் படித்தவன் தான் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கலெக்டரின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ஆனந்த கண்ணீர் விட்ட மோனிஷா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மாணவி மோனிஷாவை ஊக்கப்படுத்திய கலெக்டர் கந்தசாமியின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout