11ஆம் வகுப்பு மாணவியை கலெக்டர் இருக்கையில் உட்கார வைத்த கலெக்டர்

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

திருவண்ணாமலை அருகே செய்யாறு பகுதியில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்தார்

அப்போது கடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்ற மோனிஷா என்ற மாணவிக்கு அவர் ஊக்கத்தொகை மற்றும் பரிசு ஆகியவற்றை வழங்கி கலெக்டர் பாராட்டினார். அப்போது கலெக்டரிடம், அந்த மாணவி நானும் உங்களைபோல் மாவட்ட கலெக்டராவதே எனது லட்சியம், எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் மோனிஷாவை அழைத்த கலெக்டர் கந்தசாமி, அரசு தனக்கு வழங்கிய சைரன் பொருத்திய காரில் தன்னுடைய இருக்கையில் மோனிஷாவை உட்கார வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை மாணவியிடம் வழங்கிய கலெக்டர் கந்தசாமி, 'இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க வேண்டும். நானும் உன்னைப்போல் அரசு பள்ளியில் படித்தவன் தான் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கலெக்டரின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ஆனந்த கண்ணீர் விட்ட மோனிஷா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மாணவி மோனிஷாவை ஊக்கப்படுத்திய கலெக்டர் கந்தசாமியின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் கூறிய நெகிழ்ச்சியான வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவருடைய முதல் படம் மனசிநக்கரே (Manassinakkare) என்ற மலையாள படம் ஆகும்.

கமல், ரஜினி யார் கட்சிக்கு ஆதரவு: சந்தானம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே வரும் ஜனவரியில் தங்கள் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும்

சிவகார்த்திகேயன் படத்துடன் போட்டியா? சந்தானம் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' மற்றும் சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் 'பலூன் இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட

விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.