தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படுகிறதா? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கும் தேதி கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் வழக்கமாக திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1, 2 சனி, ஞாயிறு என்பதாலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணி நடைபெற இருப்பதாலும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜூன் 6ஆம் தேதி என்பது வியாழக்கிழமை என்ற நிலையில் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டும் பள்ளி திறந்து விட்டு அதன் பிறகு சனி ஞாயிறு மீண்டும் விடுமுறை என்பதால் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி கோடை வெயில் தற்போது தமிழக முழுவதும் கொளுத்திக் கொண்டிருப்பதால் மாணவ மாணவிகள் வெயிலால் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றம் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout