கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றமா? மாணவர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் வெயில் மே 28ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் தற்போது உச்சகட்ட வெயில் அடித்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூன் முதல் வாரம் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1 ஆம், தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு வாரம் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் விருந்து சாப்பிட்ட 80s நடிகைகள்.. வீடியோ வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் 80s நடிகைகள் மூன்று பேர் விருந்து சாப்பிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

2024ல் பாராளுமன்றம், 2028ல் சட்டமன்றம்.. விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

 மதுரையில் உள்ள விஜய ரசிகர் மன்றத்தினர் 2024 பாராளுமன்றமே, 2026 சட்டமன்றமே என்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பருத்திவீரன்' திரைப்பட நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

 கார்த்தி, பிரியாமணி  நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான 'பருத்திவீரன்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 3 முன்னணி நாயகிகள்.. இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வரும் பட என பிசியான நடிகராக உள்ளார்

ஹெல்மெட் சர்ச்சை… நடிகர் அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவிற்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு?

மும்பை சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா