ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

மாகாராஷ்டிரா மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்காக இயக்கப்பட்டு வந்த உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த 98 மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் 4 ஆசிரியர்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வஷிம் மாவட்டத்தில் உள்ள பாவனா பப்ளிக் உண்டு உறைவிட பள்ளிக்கு அதில் படித்து வந்த 5-9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தந்து உள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு வரும் அனைத்து மாவணர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பள்ளிக்கு வந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் 229 மாணவர்களுக்கு அறிகுறியே இல்லாத கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் நெகட்டிவ்வாக இருந்த 98 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்பளிக்கே சென்று 4 மருத்துவக் கண்காணிப்புக் குழு மாணவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் 151 பேர் அம்ராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 55 பேர் யவத்மல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,807 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை அம்மாநிலத்தின் 7 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஷிவாங்கியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்: என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் படக்குழுவினர்களிடம் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அப்டேட் எப்போது வரும் என்ற தகவல் கூட வெளிவரவில்லை 

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் 'சூரரை போற்று' நடிகர்!

விக்னேஷ் சிவனின்  அடுத்த படத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஐந்து மொழிகளில் உருவாகும் 'சீதா': திரைக்கதை எழுதும் 'மெர்சல்' பிரபலம்!

ராமாயணத்தின் நாயகியான 'சீதா' என்ற கேரக்டரை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு தளபதி விஜய்யின் 'மெர்சல்' உள்பட பல திரைப்படங்களுக்கு

பிக்பாஸ் ஜித்தன் ரமேஷின் நெகிழ்ச்சியான பதிவு!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கு முன்னர் நடந்த மூன்று சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது

கலைமாமணியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுற்கு மற்றொரு விருது… குவியும் பாராட்டு!

சிறந்த நடிப்புக்காக மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.