என்கவுண்டர் சம்பவத்தை கொண்டாடும் பள்ளி, கல்லூரி மாணவிகள்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவரை நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும் என்றும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகள் இந்த நால்வர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து இன்று காலை நால்வரும் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்த என்கவுன்டர் சட்டப்படி தவறு என்றாலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இன்று காலை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் பேருந்தில் இருந்து என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு கைகாட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த என்கவுண்டருக்கு ஒரு சில சமூக நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பெரும்பாலான பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.