விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவி: நிறைவேற்றுவாரா விஜய்?

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

நடிகர் விஜய் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமரா முன் பள்ளி மாணவி ஒருவர் நின்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு சிறுவர் முதல் பெரியவர் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. ரசிகர்கள் பலர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டுக்கு வருவது வழக்கமாக உள்ளது

அந்த வகையில் தமிழ் செல்வி என்ற பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டி இருந்ததை அடுத்து தனது கோரிக்கையை விஜய் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா முன் கண்ணீர் மல்க வைத்தார்.

உங்கள் வீட்டின் முன் உங்களை பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன், நீங்கள் என்னை வீட்டுக்குள் அழைப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி மகளான இவர் சுற்றுலா வந்த நிலையில் விஜய் வீட்டின் முன் இருந்த சிசிடிவி முன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் செல்வி மட்டுமின்றி அவரது குடும்பமே விஜயின் ரசிகர்கள் என்ற நிலையில் இந்த வீடியோவை விஜய் பார்த்து தமிழ் செல்வியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மகளுக்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்.. ஏன் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது மகளுக்கு வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

மாதவனுக்கும், அவரது மனைவிக்கும் பாராட்டு தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. ஏன் தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவியின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்த த்ரிஷா, ஜெயம் ரவி.. 'பொன்னியின் செல்வன்' புரமோஷன் காரணமா?

 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை குவித்த மாதவன் மகன்.. இத்தனை பதக்கங்களா?

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை

'சூது கவ்வும் 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விஜய் சேதுபதி இல்லையா?

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'சூது கவ்வும்'. திருக்குமரன்  என்டர்டெயின்மென்ட்