டிக்டாக்கில் பழக்கத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்: பரிதாபமாக போன உயிர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக் டாக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் இந்த டிக்டாக் செயலியால் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தவறான வழியில் செல்ல இந்த டிக் டாக் வழிவகுக்கின்றது என்றும் எனவே இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும் பல சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இந்த டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கொடுவாய் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியும், வேல்முருகன் என்ற இளைஞனும் டிக் டாக் மூலம் பழக்கம் பழகினார்கள். அதன் பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாகி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கி பல்வேறு இடங்களில் சுற்றித் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவி திடீரென கர்ப்பமடைந்தார். 2 மாத கர்ப்பம் காரணமாக மன வேதனை அடைந்த அவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேல்முருகனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டிக்டாக் செயலி தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் டிக்டாக் செயலியால் பழக்கம் ஏற்பட்டு அதனால் கர்ப்பமான பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout