பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி உயிரோடு எரிப்பு: 16 பேர்களுக்கு தூக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதையடுத்து இந்த குற்றத்தை செய்த 16 பேருக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளது
வங்கதேசத்தில் உள்ள ஃபெனி என்ற நகரை சேர்ந்த நுஸ்ரத் ஜகான் ரஃபி என்ற மாணவி அந்த பள்ளியின் தலைமையாசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் பொய்யானது என தலைமையாசிரியர், அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு சென்ற ஒரு கும்பல் அவரை உயிரோடு எரித்து கொலை செய்தது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து 2 மாணவிகள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது 16 பேர்களின் குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளதால் அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments