11ஆம் வகுப்பு மாணவியை வெவ்வேறு ஊருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாமக்கல்லில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அதன் பின்னர் அவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சிநகர் என்ற பகுதியில் உள்ள ஒரு மாணவி கொடைக்கானலில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை உடன் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவித்த நிலையில் பள்ளியிலிருந்து மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஜீவா என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளதாக போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின் மூன்று நாட்கள் கழித்து கொத்தனார் ஜீவாவுடன் அந்த மாணவி ஊர் திரும்பி வந்தபோது போலீசார் மாணவியை மீட்டு ஜீவாவை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது அந்த பெண்ணை தான் காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் இந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு ஊராக அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஜீவா மீது போக்சோ சட்டம்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன் பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காதல் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி வாலிபரின் பின்னால் சென்ற பதினோராம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com