"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" பாட்டுப்பாடி வைரலான பள்ளிச் சிறுவன்..! வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூகவலைதளங்களைப் பொறுத்தவரை எது வைரலாகும் என்று யூகிக்கவே முடியாது. அது சில சமயம் மகிழ்ச்சி தரலாம், மனம் உருக வைக்கலாம், பதர வைக்கலாம், அழ வைக்கலாம் இப்படி எதுவாகவும் இருக்கலாம். எதுவாயினும் அன்றைய நாள் முழுவதும் சமூக வலைதளங்களையெ ஆட்டிப்படைத்து பேசு பொருளாக்கும்.
அந்த வகையில் இன்று ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் பள்ளி அறையில் பாடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. 1962-ம் ஆண்டு சந்திரபாபு, ரங்காராவ், சவுகார் ஜானகி நடிப்பில் வெளியான படம் அன்னை. இந்த படத்தில் சந்திரபாபு பாடிய புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ற பாடல் இன்றளவும் பலராலும் விரும்பப்படும் பாடலாக உள்ளது. இந்த பாடலை பால்மனம் மாறாத அந்தச் சிறுவன் பள்ளி சீருடையில் அச்சுபிசகாமல் பாடி பலரையும் வியக்கவைக்கிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7-இல் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்த சீசன் 7-இல் இரண்டாவது போட்டியாளராகப் பாடி நடுவர்கள் மட்டுமல்லாது அரங்கில் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Which school is this? pic.twitter.com/xti1d0zwxW
— Sriram (@SriramMadras) February 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments