10 நிமிடம் தாமதம் ஒரு குற்றமா? ஆசிரியர் தண்டனையால் பலியான சென்னை மாணவன்
- IndiaGlitz, [Thursday,January 18 2018]
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் காரணமாக பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் நரேந்திரன் இன்று பள்ளிக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் என்பவர் மாணவர் நரேந்திரரை டக்-வாத் என்னும் முட்டியால் நடக்கும் தண்டனையை அளித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த மாணவர் நரேந்திரர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர் நரேந்திரரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரந்து வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
பள்ளிக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்தது ஒரு பெரிய குற்றமா? இதற்கெல்லாம் தண்டனையா? என்று சக மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.,