'அவெஞ்சர்ஸ்' பட நடிகைக்கு 3வது திருமணம்!

ஹாலிவுட் நடிகையும் உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரும் 'அவெஞ்சர்ஸ்' சீரீஸ் படங்களில் நடித்தவருமான ஸ்கர்லெட் ஜொஹான்சன் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்யவுள்ளார்.

ஸ்கர்லெட் ஜொஹான்சன் ரியான் ரெனால்ட்ஸ் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2011ஆம் ஆண்டு பிரிந்தார். அதன்பின் ரொமென் டாரிக் என்பவரை திருமணம் செய்து அவரையும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலின் ஜோஸ்ட் என்பவரை ஸ்கர்லெட் ஜொஹான்சன் காதலித்து வந்தார். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' படத்தின் பிரிமியர் காட்சியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்கர்லெட் ஜொஹான்சன் அவர்கள் 'தி வெஞ்சர்ஸ்', 'அவேஞ்சர்ஸ்' 'ஏஜ் ஆப் அல்ட்ரான்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' ஆகிய படங்கள் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.