தமிழக மாணவர்களின் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட், கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ ஒரு வாதத்தை முன்வைத்தது. மதுரை ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்தி கருணை மதிப்பெண்களை வழங்கினால் ஒருசில தமிழக மாணவர்கள் மொத்த மதிப்பெண்ணான 720ஐ விட அதிகமாக பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. குறிப்பாக 512017442 என்ற ரோல் எண்ணை கொண்ட மாணவர் ஏற்கனவே நீட் தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், அவருக்கு 196 கருணை மதிப்பெண்களை கொடுத்தால் அவருடைய மொத்த மதிப்பெண் 750 ஆக மாறிவிடும் என்றும் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய ஒரு மாணவர் எப்படி 750 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கேள்வியை சி.பி.எஸ்.இ எழுப்பியது.
இதனையடுத்தே தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments