நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தடை செய்யும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Wednesday,September 06 2017]
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சியை பார்த்து பிற மாநில மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தடைகோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய மறுத்துவிட்டது.
இதனால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இன்னும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.