எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! தினகரன் உற்சாகம்
- IndiaGlitz, [Wednesday,June 27 2018]
தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் நீதிபதி விமலா, மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று தங்கத்தமிழ்செல்வன் தவிர 17 எம்.எல்.ஏக்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவசர வழக்காக விசாரணை செய்ய முடிவு செய்த சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை சற்றுமுன் விசாரணை செய்தது.
இன்றைய விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருந்த நீதிபதி விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணா அவர்களை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதியதாக நியமனம் செய்யப்பட்ட மூன்றாவது நீதிபதி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்குவார் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தர்வு தினகரன் அணியினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.