ஆண்கள் திருமண வயதை குறைக்க வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
- IndiaGlitz, [Monday,October 22 2018]
ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் ஆண்களின் வயது 18 என்று இருக்கும் நிலையில் திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 வயது என்றும், ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை செய்த நிலையில் வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கு தொடுத்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது.
ஆனால் அதேசமயம், 18 வயதுடைய ஆண் ஒருவர் தான் திருமணம் செய்ய அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.