ஹாட்ரிக் அடிக்கும் தீவிர முயற்சியில் நடிகை சாயீஷா

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

இயக்குனர் விஜய் இயக்கிய 'வனமகள்' என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் கோலிவுட் திரையுலகின் இன்றைய ஹாட் டாக் நடிகை சாயீஷாதான். முதல் படம் சுமாராக ஓடியபோதிலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்' , விஜய்சேதுபதியுடன் 'ஜூங்கா' மற்றும் ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்' ஆகிய திரைப்படங்களில் சாயிஷா நடித்து முடித்துள்ளார்.

இந்த மூன்று படங்களுமே நல்ல எதிர்ப்பார்ப்பிற்குரிய படங்கள் என்பதால் இந்த மூன்று படங்களும் வெற்றி பெற்றால் சாயிஷா முன்னணி இடத்தை பிடித்துவிடுவார் என்றே கருதப்படுகிறது. மேலும் பொதுவாக நடிகைகள் தாங்கள் நடித்த படங்களின் புரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சாயீஷா, சமீபத்தில் நடந்த 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் 'ஜுங்கா' படங்களின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் சாயீஷா தான் நடித்த படங்களின் புரமோஷன்களில் கலந்து கொண்டு படத்தின் விளம்பரத்திற்கு உதவி வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 30 விஜய் படங்கள்

தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர் அமெரிக்காவில் கைது

இந்திய தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த குற்றத்திற்காக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த புதுமாப்பிள்ளை நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை அருகே விறுவிறுப்புடன் நடந்து வருகிறது

அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது ஏன்? புதிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருவது தெரிந்ததே.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய ரொமான்ஸ் பாடல்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதும் தெரிந்ததே.