அவங்க ஆட்டம் செம சூப்பர்: நடிகை சாயிஷாவை பாராட்டும் பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகி சாயிஷா நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான். ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் ஒப்பந்தமானதோடு இன்னும் இரண்டு தமிழ் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மேலும் 'வனமகன்' படக்குழுவினர் குறிப்பாக ஜெயம் ரவி, சாயிஷா குறித்து கூறுகையில் அவரது நடனம் பிரம்மாதமாக இருப்பதாக கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதை உறுதி செய்யும் வகையில் தற்போது பிரபல எடிட்டர் அந்தோணியும் சாயிஷாவின் நடனம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியபோது, 'வனமகன்' படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு ஹீரோயின் அறிமுக பாட்டு தான். அந்த பாட்டு செம்மையாக இருக்கும். பாட்டும் சூப்பர், லொகேஷனும் சூப்பர், அதைவிட சாயிஷவின் நடனம் சூப்பரோ சூப்பர் செம சூப்பர்' என்று புகழ்ந்துள்ளார். எடிட்டர் அந்தோணி குறிப்பிட்டுள்ள இந்த 'டம்ண் டம்ண்' பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதும் இந்த பாடல் ஜூன் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்ற 'வனமகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, வருண், தம்பிராமையா, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com