திருமணத்திற்கு முந்தைய நாளில் சாயிஷாவின் நடனம்: வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Sunday,March 10 2019]
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா கடந்த ஆண்டு வெளியான 'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் கொண்டனர்,. இந்த காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இன்று ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெறுகிறது.
நடிகை சாயிஷா பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான திலீப் குமார்- சாயிரா பானுவின் பேத்தி என்பதால் நேற்றும் இன்றும் சஞ்சய்தத் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நேற்று திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சியில் கரீனா கபூர் பாடல் ஒன்றுக்கு சாயிஷா நடனம் ஆடினார். சாயிஷா ஏற்கனவே அபார நடனத்திறமை கொண்டவர் என்பது தெரிந்ததே. எனவே அவரது திருமணத்திற்கு அவரே ஆடிய நடனம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
View this post on InstagramA post shared by sayyesha (@sayyesha_official_fc) on Mar 8, 2019 at 8:50am PST