எதற்கு பயப்பட வேண்டும்? சாயிஷாவின் அற்புதமான விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த ’வனமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’கடைக்குட்டிசிங்கம்’ ’ஜூங்கா’ ‘கஜினிகாந்த்’ மற்றும் ‘காப்பான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா. தற்போது அவர் தனது கணவர் ஆர்யாவுடன் ‘டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி தற்போது அவர் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் அர்த்தமுள்ள கருத்துக்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் எதற்கு பயப்பட வேண்டும், எதற்கு பயப்பட கூடாது என்ற ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
சாயிஷா தனது பதிவில், ‘வித்தியாசமாக இருப்பதற்கு பயப்பட வேண்டாம், எல்லோரையும் போல இருப்பதற்கு மட்டுமே பயப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். Don't Be Afraid of Being Different Be Afraid of Being the Same As Everyone Else என்ற தலைப்பில் வெளியான ஆங்கில புத்தகத்தின் தலைப்பை தான் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், சாயிஷாவின் இந்த பதிவுக்கு அதிகபட்ச பாசிட்டிவ் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments