சூர்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகையின் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,June 10 2018]

கோலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை சாயிஷா. இவர் கார்த்தியுடன் நடித்து முடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும், ஆர்யாவுடன் நடித்து முடித்துள்ள 'கஜினிகாந்த்' , விஜய்சேதுபதியுடன் நடித்து முடித்துள்ள 'ஜுங்கா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இந்த மூன்று படங்களும் வெற்றி பெற்றால் இவர் கோலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சாயிஷா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா நடிப்பில் அனிருத் இசையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல' என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் சாயிஷா. சாயிஷா ஏற்கனவே நல்ல டான்ஸர் என்று பெயரெடுத்துள்ள நிலையில் அவருடைய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் கே.வி,ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் சாயிஷாவின் இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் அதிகளவு லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் சாயிஷா நடித்த 'ஜூங்கா' மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்களில் இசை வெளியீடு நாளை அதாவது ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.