கே.பாலசந்தர் படத்தில் பணிபுரிந்த சாக்சோபோன் கலைஞர் காலமானார்

  • IndiaGlitz, [Friday,October 11 2019]

கே.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ் நடித்த ’டூயட்’ என்ற படம் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பிரபு ஒரு சாக்சோபோன் கலைஞராக நடித்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சாக்சோபோன் இசையில் உருவாகியிருக்கும். இந்த படத்தில் பாடல்களுக்கு சாக்சோபோன் வாசித்தவர் தான் இந்திய அளவில் பிரபலமான கத்ரி கோபால்நாத். இவர் இன்று காலமானார். இவருக்கு வயது 69.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கத்ரி கோபால்நாத் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த கத்ரி கோபால்நாத் இசை சேவையை பாராட்டி கடந்த 2004-இல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. மேலும் கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா செய்த சிறப்புக்குரிய உதவி!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் வழங்கி கெளரவித்தார் என்பது தெரிந்ததே

ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு.

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

'என்னை அறிந்தால்', செக்க சிவந்த வானம்' தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது 'அக்னி சிறகுகள்', பாக்ஸர்'மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் நாளை வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.