முதல் தலைமுறை வாக்காளர்கள் யாரை நம்புகிறார்கள்? விளக்கும் பிரத்யேக வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. காரணம் தமிழகத்தில் மிகப்பெரும் அலை வீசப்போவதாக தெரிவித்து இருந்த திமுக பல்வேறு தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது 40 தொகுதிகளுக்கு 39 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மாஸ் காட்டிய ஒரு கட்சி தற்போது அறுதிப்பெரும்பான்மை வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் மாஸ் வெற்றியை பெற முடியவில்லை.
அதோடு ஏற்கனவே தமிழகத்தில் 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி, பெரிய தலைமை இல்லாமல் பல்வேறு பிளவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. இதனால் 40 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதே கடினம் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக தற்போது 75 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அதுவும் கொங்குமண்டலம், தமிழகத்தின் வடக்கு பகுதி, தருமபுரி போன்ற பகுதிகளை ஒட்டுமொத்தமாகத் தக்க வைத்துள்ளது. இதனால் அதிமுக இத்தேர்தலில் தனது வலிமையை நிலைநாட்டி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் சூழலில் தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி கணிசமாக 6.85% வாக்குகளைப் பெற்று 3 ஆவது பெரிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார் திரு சீமான். இதில் ஏற்கனவே 3.45% வாக்குகளைப் பெற்ற நடிகர் கமல்ஹாசன் 1.15% வாக்குகளை இத்தேர்தலில் இழந்து இருக்கிறார். மேலும் ஒரு பலமான எதிரியாகக் கருதப்பட்ட டிடிவி தினகரன் ஏற்கனவே பெற்று இருந்த 5.5% வாக்குகளில் தற்போது 2.5% வாக்குகளை இழந்து இருக்கிறார். தேமுதிக முன்னதாகப் பெற்று இருந்த 2.5% வாக்குகளில் வெறும் அரை சதம் வாக்குகளை மட்டுமே தக்க வைத்துள்ளது.
இதனால் தமிழக அளவில் மாற்றுச் சக்தியாக கருதப்பட்ட மநீம, அமமுக, தேமுதிக என அனைத்தும் தனது வாய்ப்புகளை இழந்து அடுத்தத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா என்பதே சந்தேகமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் திரு சீமான் நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தமிழகப் பகுதிகளிலும் அதுவும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டு கணிசமான வாக்குகளைக் குவித்து இருக்கிறார்.
இந்த அடிப்படையில் இளம் தலைமுறை வாக்காளர்கள் திராவிடத்திற்கு மாற்றாகவோ அல்லது புது சக்தியை விரும்புகிற வகையிலோ திரு சீமானை பார்க்கின்றனர். இந்நிலையில் சீமான் ஏன் மற்ற கட்சிகளிடம் இருந்து வித்தியாசப்படுகிறார்? இளம் தலைமுறை வாக்காளர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? இதே கருத்தியலோடு திராவிடக் கட்சிகள் செயல்பட்டால் எதிர்காலத்தில் நிலைக்க முடியுமா? அல்லது இந்த அலையில் சீமான் வளர்ந்து பெரிய ஆலமரமாக உருவெடுப்பாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மூத்தப் பத்திரிக்கையாளர் திரு சவுக்கு சங்கர் அவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments