ஊழலைப் பற்றி நடிகர் கமல் ஏன் பேசுகிறார்? விமர்சனத்தால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
- IndiaGlitz, [Monday,March 22 2021]
வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் “வெற்றிநடை போடும் தமிழகம்“ என அதிமுகவும், “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்“ எனும் பெயரில் திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு எனும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்தப் பிரச்சாரத்திற்கு வேறு பின்னணி இருப்பதாகவும் ஊழலை ஒழிக்க நினைக்கும் இவரது கூட்டணி அடிப்படையில் வேறு கொள்கைகளை ஆதரிக்கிறது எனவும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், நடிகர் கமல்ஹாசனின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பல கோணங்களில் கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார்.
மேலும் நடிகர் கமல் முன்வைக்கும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுமா? என்பது குறித்தும், இவரது அரசியல் வருகையால் தமிழக அரசியல் களத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என்பது குறித்தும் நடிகர் கமலின் கொள்கைகள் தமிழக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் மனிதர்களை ஈர்த்து இருப்பது குறித்தும் பல கோணங்களில் பதில் அளித்து உள்ளார். தமிழக தேர்தல் தீவிரம் பெற்று இருக்கும் இந்நேரத்தில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.