சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏக்கள்? சசிகலா குறித்து மீண்டும் பீதியை கிளப்பும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்ட திருமதி சசிகலா குறித்து தமிழகத்தில் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஒரு ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர். வரப்போகும் சட்டப் பேரவை தேர்தலில் சசிகலாவின் பங்கு அளப்பரியதாக இருக்கும். அவர் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவார் எனக் கருத்துக் கூறியிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அரசியலை விட்டு விலகுகிறேன் எனக் கூறி தற்போது சசிகலா அமைதி காத்து வருகிறார்.
இந்த அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது? தற்போது தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் அனைத்து தொகுதி பங்கீடுகளும் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த வேட்பாளர் பட்டியல் ஒருவகையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அதாவது இவரது கணிப்புப்படி அதிமுக கூட்டணி ஏற்படுத்தி இருக்கும் அளவீடுகளினால் சில அதிமுக எம்எல்ஏக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
இந்த நிலைமை மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் சசிகலாவின் திடீர் அரசியல் விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தனக்கே உரித்தான பாணியுடன் சவுக்கு சங்கர் அவர்கள் விளக்கி உள்ளார். தற்போது அதிமுகவில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த அரசியல் வீடியோ தனிக் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout