திமுக காவி உடுத்தவும் தயங்காது? கடுமையாக விமர்சிக்கும் அரசியல் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
சமூக நீதி கொள்கையைக் கொண்டு இருக்கும் திமுக மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பிறகு தனது கொள்கையில் பிடிப்புடன் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி வருகின்றனர். காரணம் தேசிய கட்சியான பிஜேபி வேலைப் பிடித்தவுடன் சமூக நீதி பேசும் திமுகவும் வேலைப்பிடித்து இருக்கிறது. இத்தகைய போக்குகளுக்கு காரணம் அரசியல் வாக்கு என்பதாக இருந்தாலும் இதற்கு கொள்கை இடம் தருமா? என்பதையும் சிலர் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையைக் குறித்தும் சிலர் விமர்சனம் வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மத்திய அரசின் கைவசம் இருக்கும் சமையல் எரிவாயுவிற்கு எப்படி நீங்கள் மானியம் வழங்க முடியும், பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்காக மாநில வரியில் இருந்து சிறிது குறைத்துக் கொண்டால் அது நிர்வாகத்தை பாதிக்காதா? ஒருவேளை இப்படியே எல்லா திட்டங்களுக்கும் சலுகைகளை கொடுத்துக் கொண்டு இருக்கும்போது ஏற்கனவே 9 லட்சம் கோடி கடனை வைத்திருக்கும் தமிழக அரசியலை எப்படி நடத்துவது?
இத்தகைய நெருக்கடியான நிலைமையை காரணம் காட்டி மத்தியில் அமல்படுத்த இருக்கும் சில சட்டங்களை தமிழகத்திற்கு திணிக்க மாட்டார்களா? ஏற்கனவே ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருக்கும்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்கையை எப்படி தொடர்ந்து கடைப்பிடிக்க முடியும்? கொள்கை என்பது பெயரளவில்தான் இருக்கிறதா? அல்லது தேர்தலுக்காகவும் நிர்வாகத்திற்காகவும் திமுக தலைமை பாசாங்கு காட்டிவிட்டு பின்னாட்களில் கொள்கையை காற்றில் பறக்க விட்டு விடுமா?
இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் தொடர்ந்து திமுக மீது வைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை சார்ந்த மற்றும் நிர்வாகம் சார்ந்த கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் நமக்கு பிரத்யேக நேர்காணல் அளித்து இருக்கிறார். தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வரும் இந்த வேளையில் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.