என்ன ஒரு அருமையான நடிப்பு: 'மஹான்' சிம்ரனை புகழ்ந்த பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஹான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சிம்ரன் பகுதியின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா ராதாகிருஷ்ணன், சிம்ரன் பகுதிக்கு டப்பிங் செய்து வருகிறார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது ‘மஹான்’ படத்தில் என்ன ஒரு அருமையான சிம்ரன் நடிப்பு. பொருத்தமான இடத்தில் நிறுத்தி, மன அழுத்தத்தை பிரமாதமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் புத்திசாலித்தனமான நடிகை மற்றும் கடின உழைப்பாளி’ என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணீபோஜன், பாபிசிம்ஹா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித்குமார் தயாரித்துள்ளார்.

More News

மனைவி பிறந்த நாளில் விஷ்ணுவிஷால் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் வீடியோ ஒன்றை

இந்த வருஷம் தல, அடுத்த வருஷம் தளபதி: சூப்பர் அப்டேட்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே தினத்தில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் மீண்டும்

'நான் சிகப்பு மனிதன்' பாணியில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் அடுத்த படம்!

கடந்த 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பாக்கியராஜ், அம்பிகா நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'நான் சிகப்பு மனிதன்'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து

மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்முடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…

மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் மம்முட்டி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

'மங்காத்தா 2: வெங்கட்பிரபுவிடம் ஹர்பஜன்சிங் விடுத்த வேண்டுகோள்!

தல அஜீத் நடித்த 'மங்காத்தா' படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என அஜித் ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.