என்னால் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை.. அவர் எப்படி 11 வருடங்கள் இருந்தாரோ? பிரபல இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாவர்க்கர் இருந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை என்றும் அவர் எப்படி 11 வருடங்கள் அந்த சிறையில் இருந்தார் என்றே தெரியவில்லை என்றும் சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீர சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. ரன்தீப் ஹூடா இயக்கத்தில் ரன்தீப் மற்றும் உட்கார்ஷ் நைதானி திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையை நேரில் பார்க்க இயக்குனர் ரன்தீப் ஹூடா முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்தமானில் உள்ள காலாபாணி சிறைச்சாலைக்கு சென்று அவர் சாவர்க்கர் இருந்த அறைக்கு சென்று தன்னை தானே பூட்டி கொண்ட நிலையில் அந்த அறையில் அவரால் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
நம்மால் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாத ஒரு 7க்கு 11 அடி சிறையில் எப்படி 11 ஆண்டுகள் சாவர்க்கர் தனிமையாக அடைந்து கிடைத்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கரின் இணையற்ற தியாகத்தை நினைத்துப் பார்க்கிறேன், அவரை சில அமைப்புகள் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout